44 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தாம்பரம் கமிஷனராக அமல்ராஜ் நியமனம்

தமிழகத்தில் 44 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். தாம்பரம் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2022-06-06 00:21 GMT

சென்னை,

தமிழகத்தில் போலீஸ் துறையில் பெரிய அளவில் இடமாற்றங்களை செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

44 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட ஏற்ற வகையில் 44 ஐ.பி.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்தது.

அதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதன்விவரம் வருமாறு:-

தாம்பரம் புதிய கமிஷனர் அமல்ராஜ்

1.தாம்பரம் போலீஸ் கமிஷனர் பதவி வகித்து வந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி டாக்டர் எம்.ரவி ஓய்வு பெற்றார். இப்போது தாம்பரம் புதிய போலீஸ் கமிஷனராக டாக்டர் ஏ.அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். . இவர் தற்போது தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனர் பதவியில் உள்ளார்.

2.காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் என்.கண்ணன், சென்னையில் ஆயுதப்படை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை-நெல்லை புதிய கமிஷனர்கள்

3. வி. பாலகிருஷ்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருச்சி மண்டல ஐ.ஜி. பதவியில் இருந்தார். கோவை போலீஸ் கமிஷனராக இருந்து வந்த பிரதீப் குமார் மத்திய அரசு பணிக்கு சென்று விட்டார்.

4 காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அவினாஷ்குமார், நெல்லை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஐ.ஜி.க்கள்

5. பி.சி. தேன்மொழி, வடக்கு மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். இவர் இதுவரையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தார்.

6. சி.மகேஷ்வரி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பணி நியமனம் பெற்றுள்ளார். இதுவரையில் இவர் தொழில்நுட்பப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்தார்.

7.சந்தோஷ்குமார், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை நெல்லை போலீஸ் கமிஷனராக பதவி வகித்தார்.

8. எம்.வி. ஜெயகவுரி. போலீஸ் அகாடமி கூடுதல் இயக்குனராக பொறுப்பு ஏற்பார். இவர், சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தார்.

போலீஸ் சூப்பிரண்டுகள்

தமிழகம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டுகள் நிலையிலான 36 அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

1. சி.விஜயகுமார்-திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. இ. சுந்தரவதனம்-சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக பணியாற்றும் இவர், கரூர் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

3. ஆர். சிவபிரசாத்-சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக பணியில் இருந்த இவர், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

4.பாஸ்கரன்-மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

5, அல்லாடிபள்ளி பவன்குமார்ரெட்டி-திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த இவர், சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6.சுந்தரவடிவேல்-கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், ராமநாதபுரம் கடலோர காவல் குழும சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

செங்குன்றம் துணை கமிஷனர்

7.சீனிவாசன்-திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், நெல்லை நகர கிழக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8.சுரேஷ்குமார்-நெல்லை கிழக்கு துணை கமிஷனராக பணிபுரிந்து வந்த இவர், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

9.கார்த்திக்-ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியில் உள்ள இவர், மாநில உளவுப்பிரிவு-1 சூப்பிரண்டாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

10.தங்கதுரை-மதுரை தெற்கு துணை கமிஷனர் பொறுப்பில் உள்ள இவர், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

11.ஜெயந்தி-சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டான இவர், சென்னை மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

12.மணிவண்ணன்-சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக இருந்த இவர், சென்னை ஆவடி கமிஷனரகத்தில் செங்குன்றம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் புதிய சூப்பிரண்டு

13.வருண்குமார்-திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், மதுரை அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

14.பகேர்லா சேபாஸ் கல்யாண்-காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், திருவள்ளூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

15.சண்முகப்பிரியா-சென்னை சைபர் கிரைம்-1 சூப்பிரண்டாக பணியில் இருந்த இவர், சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள என்.ஆர்.ஐ.பிரிவு சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

16.கார்த்திகேயன்-சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக பதவி வகித்த இவர், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

17.ஓம் பிரகாஷ் மீனா- சென்னை கிழக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக உள்ள இவர், டெல்லி தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டராக பதவி ஏற்பார்.

18.மோகன்ராஜ்-சேலம் தெற்கு துணை கமிஷனராக பணியாற்றி வந்த இவர், மதுரை வடக்கு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

சென்னை தலைமையக துணை கமிஷனர்

19.செந்தில்குமார்-கோவை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பணியில் உள்ள இவர், சென்னை தலைமையக துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

20.ஜெயச்சந்திரன்-கோவை வடக்கு துணை கமிஷனராக பணியாற்றி வந்த இவர், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

21.ஸ்டாலின்-மதுரை தலைமையக துணை கமிஷனராக பணியாற்றி வந்த இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு-3 துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

22.செல்வராஜ்-கோவை தலைமையக துணை கமிஷனராக பணியாற்றிய இவர், சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக மாற்றப்பட்டார்.

23.முத்தரசு- திருச்சி தெற்கு துணை கமிஷனராக உள்ள இவர், சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

24.ராஜசேகரன்-மதுரை வடக்கு துணை கமிஷனராக பணியில் உள்ள இவர், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் எஸ்டாபிளிஸ்மெண்ட் உதவி ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

25.சுரேஷ்குமார்-நெல்லை மேற்கு துணை கமிஷனராக பணியாற்றிய இவர், புதிதாக உருவான திருச்சி தலைமையக துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

26.ராமர்-சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனரான இவர், சென்னை கமாண்டோ படை சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

சைபர் கிரைம் துணை கமிஷனர்

27.தேஷ்முக் சேகர் சஞ்சய்-மதுரை சிறப்பு காவல்படை கமாண்டரான இவர்,சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சைபர் கிரைம் துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

28.கே.ஸ்டாலின்-சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு சூப்பிரண்டாக உள்ள இவர், சென்னை சைபர் அரங்க சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

29.வெண்மதி- சென்னை ஆவடி ரெஜிமெண்டல் கமாண்டராக பணியாற்றும் இவர், டி.ஜி.பி.அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

30.விஜயலட்சுமி-சென்னை டி.ஜி.பி.அலுவலகத்தில் சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஐ.ஜி.யாக பொறுப்பு வகிக்கும் இவர், சென்னை ஆவடி ரெஜிமெண்டல் கமாண்டராக மாற்றப்பட்டார்.

31.ரவி-திருப்பூர் தெற்கு துணை கமிஷனராக பணியில் உள்ள இவர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

32.சக்திவேல்-திருச்சி நகர வடக்கு துணை கமிஷனராக பணியாற்றும் இவர், சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு

33.உமா-கோவை தெற்கு துணை கமிஷனராக பணியாற்றும் இவர், சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

34.வேதரத்தினம்-சென்னை சைபர் அரங்க சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

35.அருண்பாலகோபாலன்-சென்னை சைபர் கிரைம்-2 சூப்பிரண்டான இவர், சி.பி.சி.ஐ.டி. சைபர் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

36. அசோக்குமார்-சொத்துரிமை செயலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், சென்னை சைபர் கிரைம் பிரிவு-2 சூப்பிரண்டாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அமல்ராஜின் சிறப்பான பணிகள்

தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ், தமிழக காவல்துறையில் 1996-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அவர் முதன்முதலில் திருப்பூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கினார். அதன்பிறகு மதுரை, தர்மபுரி, தேனி, காஞ்சீபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக சிறப்பாக பணியாற்றினார்.

ராமநாதபுரம், திருச்சி, சேலம் ஆகிய சரகங்களில் டி.ஐ.ஜி.யாகவும் திறம்பட பணியாற்றினார். சேலம், கோவை, திருச்சி ஆகிய மாநகரங்களில் கமிஷனராக பணிபுரிந்து தனது சிறப்பான முத்திரையை பதித்தார்.

மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும், சென்னை தலைமையக கூடுதல் கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார். நேர்மையான, அமைதியான முறையில் அவருக்கே உரிய பாணியில் அவர் சிறப்பாக பணியாற்றியதாக மக்கள் மத்தியில் பெயர் பெற்றுள்ளார்.

அவர் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகேயுள்ள முல்லங்கன்னாவிளை கிராமத்தை சேர்ந்தவர். அவர் பள்ளி படிப்பை நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியிலும், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளை திருச்சி ஜோசப் கல்லூரியிலும் படித்துள்ளார். பள்ளி-கல்லூரியில் படித்தபோது ஆக்கி விளையாட்டில் தலைசிறந்து விளங்கினார். கோவையில் கமிஷனராக பணியாற்றியபோது அங்கு போலீஸ் மியூசியம் ஒன்றை சிறப்பாக உருவாக்கினார்.

அதேபோன்று சென்னையில் தலைமையக கூடுதல் கமிஷனராக பணியாற்றியபோது எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனராக வளாகத்தில் போலீஸ் மியூசியம் ஒன்றை உருவாக்கிய பெருமை அவரையே சேரும்.

இவர் தலைசிறந்த பணிக்காக ஜனாதிபதி, முதல்-அமைச்சரின் பதக்கங்களை பெற்றுள்ளார். இவருக்கு சலீமா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் 5 புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்