மது விற்ற 42 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 42 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-13 18:45 GMT

நெல்லை சந்திப்பு உடையார்பட்டி அருகில் சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வ கணபதி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்த அருணாச்சலம் (வயது 46) என்பவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்ததார்.

அப்போது விசாரிக்கச்சென்ற போலீசாரை பணிசெய்ய விடாமல் மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்து, அருணாசலத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து 12 மது பாட்டில்கள் மற்றும் ரூ.110 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் போலீசார் கடந்த 6-ந் தேதி முதல் நேற்று வரை அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் சட்டவிரோதமாக மது விற்றதாக 41 பேரை போலீசார் கைது செய்து 500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்