காசோலைகளை திருடி ரூ.42 லட்சம் மோசடி

தனியார் கார் விற்பனை மையத்தில் காசோலைகளை திருடி ரூ.42 லட்சம் மோசடி செய்த முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-25 15:08 GMT

கோவை-திருச்சி ரோட்டில் தனியார் கார் விற்பனை ஷோரூம் உள்ளது. இங்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெங் கடசுப்பிரமணி (வயது 45) என்பவர் கணக்குப்பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

அவர் திடீரென வேலையில் இருந்து நின்றுவிட்டார். இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் கணக்குகளை தணிக்கை செய்த போது, வெங்கடசுப்பிரமணி, அந்த அலுவல கத்தில் இருந்து திருடிய காசோலைகளை திருடி நிறுவனத்தின் கணக்கில் இருந்து ரூ.42 லட்சத்தை எடுத்து கூட்டாளிகளின் கணக்கிற்கு அனுப்பி மோசடி செய்தது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடியில் தொடர்புடைய வெங்கட சுப்பிரமணியத்தின் கூட்டாளிகள் கார்த்திக், சிவா, தினேஷ்பாபு ஆகியோரை கைது செய்தனர்.

வெங்கடசுப்பிரமணி தலைமறை வாக இருந்தார். இந்தநிலையில் அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

மோசடி செய்த பணம் அவரிடம் இருந்து முழுமையாக கைப்பற்றப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்