மில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு

கோவையில் மில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-29 16:53 GMT


கோவையில் மில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்த போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

40 பவுன் நகை திருட்டு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் துளசிதரன். இவருடைய மனைவி ஆனந்தி (வயது 59). மில் அதிபர். இவருடைய வயதான தாய்-தந்தை ரேஸ்கோர்சில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வருகிறார்கள்.

அவர்களை பராமரிக்க வேலைக்காரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் வீட்டு பீரோவில் இருந்த தங்க நகைகளை மகள் ஆனந்தி சரிபார்த்தார். அப்போது தங்கச்சங்கிலி, வளையல்கள், கைச்செயின், தங்க மோதிரம் உள்பட 40 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

போலீஸ் விசாரணை

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், அந்த வீட்டில் வேலைக்காரிகளாக சுகன்யா, திவ்யா, பிரேமா உள்பட பலர் வேலை செய்துவிட்டு, வேலையில் இருந்து நின்றுவிட்டனர். இதனால் இந்த திருட்டு தொடர்பாக ஏற்கனவே வேலையில் இருந்த பெண்கள், மற்றும் தற்போது வேலை செய்பவர்கள் உள்பட பலரிடம் ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்