மாத ஊதியம் பெற்ற 40 சதவீதம் பேர் தினக்கூலிகளாக மாறிய நிலை
கொரோனா பாதிப்புக்கு பின் மாத ஊதியம் பெற்றவர்கள் மற்றும் சுய தொழில் செய்தவர்களில் 40சதவீதம் பேர் தினக்கூலிகளாக மாறிவிட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு பின் மாத ஊதியம் பெற்றவர்கள் மற்றும் சுய தொழில் செய்தவர்களில் 40சதவீதம் பேர் தினக்கூலிகளாக மாறிவிட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
40 சதவீதம்
இது பற்றிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கொரோனா பாதிப்புக்கு பிந்தைய காலத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் மாத ஊதியம் பெற்றவர்கள் மற்றும் சுய தொழில் புரிந்தவர்களில் 40 சதவீதம் பேர் தினக்கூலிகளாக மாறிவிட்டனர்.
இதில் நகர்ப்புறங்களில் 35 சதவீதம் பேர் தினக்கூலிகளாக மாறிவிட்ட நிலையில் அதிகபட்சமாக ஆண்கள் 39 சதவீதமும், பெண்கள் 25 சதவீதமும் தினக்கூலிகளாக மாறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 2022-ல் முதல் காலாண்டில் வேலை இல்லாமல் இருந்தவர்களில் 10 சதவீத ஆண்களும், 2-வது காலாண்டில் 10 சதவீத ஆண்களும் தினக்கூலிகளாக மாறியநிலை ஏற்பட்டுள்ளது.
அதிகரிப்பு
ஆனால் பெண்களை பொறுத்தமட்டில் 25 சதவீத பெண்கள் மாத ஊதியம் பெறுபவர்களாக மாறினாலும் 25 சதவீதம் பெண்கள் தினக்கூலிகளாகவும் மாறி உள்ளனர். இந்தநிலையில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 2017-ம் ஆண்டு 20 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த 2021-2022-ல் 28 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக கிராமப்பகுதிகளில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் நகர் பகுதிகளில் கடந்த 2017-ல் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை 16.7 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த 2021-2022-ல் 19.7 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.