கடையில் பயன்படுத்திய 40 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்

கடையில் பயன்படுத்திய 40 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-09-30 18:59 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்களை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து திருப்பத்தூர், வேலூர் மாவட்ட இந்தியன் ஆயில் விற்பனை மேலாளர் ஜெகதீஷ் தலைமையில் ஆம்பூர், திருப்பத்தூர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் டீ கடைகள், ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டர்களை பயன்படுத்தியது தெரிய வந்தது.

அவ்வாறு பயன்படுத்திய 40 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வீட்டிற்கு பயன்படுத்தப்படுத்த கூடிய சிலிண்டர்களை வணிக உபயோகத்திற்கு பயன்படுத்தக் கூடாது எனவும், அவ்வாறு பயன்படுத்தப்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்