பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை வாளி தண்ணீரில் அமுக்கி கொலை

பிறந்து 40 நாட்களே ஆன ஆண் குழந்தை வாளி தண்ணீரில் அமுக்கி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2022-06-05 18:56 GMT

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவனூர் ரோடு தோல் ஷாப் பகுதியை சேர்ந்தவர் மனோ (வயது 22). இவர் சென்னை திருநின்றவூரில் உள்ள பூக்கடை ஒன்றில் மாலை கட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அம்சா நந்தினி (18). இவர் அரக்கோணம் அடுத்த தேவதானம் பகுதியை சேர்ந்தவர். வெவ்வேறு பிரிவை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அம்சா நந்தினிக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு குழந்தை யுவனுக்கு அம்சா நந்தினி பால் கொடுத்து விட்டு, குழந்தை மற்றும் மாமியார் கீதாவுடன் தரையில் படுத்து தூங்கியுள்ளார். அருகில் இருந்த கட்டிலில் மனோ தூங்கியதாக தெரிகிறது.

வாளி தண்ணீரில் அமுக்கி கொலை

நள்ளிரவு 2 மணியளவில் எழுந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது கணவர் மனோ மற்றும் மாமியார் கீதா ஆகியோரை எழுப்பி விசாரித்துள்ளார். தொடர்ந்து பல இடங்களில் தேடினர்.

அப்போது வீட்டின் வெளியே உள்ள கழிவறையில் உள்ள பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் குழந்தை யுவன் மூழ்கி தலைகீழாக இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் யாரோ குழந்தையை வாளி தண்ணீரில் அமுக்கி கொலை செய்துள்ளனர். குழந்தையை கொலை செய்த நபர்கள் யார் என்பது மர்மமாக உள்ளது.

இது குறித்து குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்