40 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
40 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசிய தகவலின் பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கம்மாபட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். வேனில்தலா 40 கிலோ கொண்ட 40 மூடை ரேஷன் அரிசி இருந்தது. அதனை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார் வேனிலிருந்த மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த வினோத் பாண்டி (வயது 35), ஜெய்ஹிந்த் புரத்தைசேர்ந்த காவேரி மணி (45) ஆகிய 2 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.