பஸ்சில் 6 கிலோ கஞ்சா கடத்தல் தஞ்சாவூரை சேர்ந்த 4 வாலிபர்கள் கைது

பஸ்சில் 6 கிலோ கஞ்சா கடத்தல் தஞ்சாவூரை சேர்ந்த 4 வாலிபர்கள் கைது

Update: 2022-08-20 12:03 GMT

வேலூர் மாவட்ட எல்லையான கணியம்பாடி வழியாக பஸ்களில் கஞ்சா கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேபி, வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் கொண்ட குழுவினர் கணியம்பாடி பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற பஸ்சை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அப்போது 4 வாலிபர்கள் வைத்திருந்த பைகளில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் தஞ்சாவூர் நகரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 22), முகமதுரபிக் (19), முகமதுசமீர் (19), அப்துல்ஹாதி (19) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்