கார் டிரைவரை தாக்கிய 4 வாலிபர்கள் கைது

கார் டிரைவரை தாக்கிய 4 வாலிபர்கள் கைது

Update: 2023-02-18 10:20 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். கார் டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற தனது நண்பருடன் கமர்சியல் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு உணவு முடித்துவிட்டு மணி கூண்டு அருகில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் 2 பேரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்தப் பகுதியில் 4 வாலிபர்கள் மது போதையில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இதுகுறித்து கேள்வி கேட்ட உதயகுமார் மற்றும் ராஜேந்திரனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. மேலும் பீர் பாட்டிலை உடைத்து ராஜேந்திரனின் தலையில் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஊட்டி மத்திய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காந்தல் பகுதியை சேர்ந்த முரளி, ரிஷி, திவாகர் நரேஷ் ஆகிய 4 பேர் இவர்களை தாக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்