சென்னை, மதுரவாயல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதி விபத்து

சென்னை, மதுரவாயல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2023-06-05 19:28 GMT

சென்னை,

சென்னை, மதுரவாயல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது.

முன்னதாக நின்று கொண்டிருந்த லாரி மீது கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி அதிவேகமாக வந்து மோதியது. அதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதியது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை பொதுமக்கள் கூடி தாக்கியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.Full View

Tags:    

மேலும் செய்திகள்