சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் ரத்து

ஈரோட்டில் பராமரிப்பு பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. ேமலும் 14 ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-23 19:38 GMT

சூரமங்கலம்:-

ஈரோடு ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளன, இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை 21 நாட்கள் சேலம், ஈரோடு, கரூர் வழியாக செல்லக்கூடிய 14 ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அந்த 14 ரெயில்கள் சேலம், நாமக்கல், கரூர் வழியாக செல்லும்.

மேலும் சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி ஈரோடு- ஜோலார்பேட்டை தினசரி முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06846) இன்று முதல் அடுத்த மாதம் 14-ந் தேதி வரை 22 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ஜோலார்பேட்டை- ஈரோடு தினசரி முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06845) நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 15-ந் தேதி வரையும், ஈரோடு- மேட்டூர் டேம் தினசரி முன்பதிவுல்லா சிறப்பு ரெயில் (06407), மேட்டூர் டேம்- ஈரோடு தினசரி முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06408) ஆகிய ரெயில்கள் நாளை முதல் அடுத்த மாதம் 14-ந் தேதி வரையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது, ரெயில் சேவையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து முன்பதிவு செய்தவர்களின் செல்போன் எண்களுக்கு சேவைகள் குறித்து தகவல் அனுப்பப்படும் என்றும், சேலம், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ரெயில் நிலையங்களில் உதவி எண்கள் கொடுக்கப்படும் என்றும் சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்