4 ஆயிரத்து 414 மூட்டைகள் பருத்தி ஏலம்

Update: 2023-08-29 19:30 GMT

நாமக்கல்- அக்கரைப்பட்டியில் 4 ஆயித்து 414 மூட்டைகள் பருத்தி ஏலம் போனது.

பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் நேற்றும் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 3 ஆயிரத்து 250 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

ரூ.80 லட்சத்துக்கு விற்பனை

இந்த பருத்தி மூட்டைகள் ரூ.80 லட்சத்துக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயிரத்து 389 வரையிலும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 700 முதல் ரூ.7 ஆயிரத்து 750 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 725 முதல் ரூ.5 ஆயிரத்து 699 வரையிலும் ஏலம் போனது.

இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.

அக்கரைப்பட்டி

வெண்ணந்தூர் அருகே அக்கரைப்பட்டியில் தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உள்ளது. இங்கு பருத்தி ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த பருத்தி ஏலத்துக்கு அளவாய்பட்டி, நடுப்பட்டி, செம்மாண்டப்பட்டி, மாமுண்டி, பாலமேடு, நாச்சிப்பட்டி, சப்பையாபுரம், கல்கட்டானூர், மதியம்பட்டி, வெண்ணந்தூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

அதேபோல் ஆத்தூர், ஈரோடு, சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலம் எடுத்தனர்.

1,164 மூட்டைகள்

இந்த ஏலத்தில் சுரபி ரக பருத்தி 1,164 மூட்டைகள் ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் பருத்தி குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரத்து 882 முதல் அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 306 வரை ஏலம் எடுக்கப்பட்டது. மொத்தம் ரூ.26 லட்சத்திற்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரங்களை விட இந்த வாரம் விலை குறைந்து ஏலம் போனதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்