தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கால்பந்து போட்டியில் கால் இறுதிக்கு 4 அணிகள் தேர்வு

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கால்பந்து போட்டியில் கால் இறுதிக்கு 4 அணிகள் தேர்வு

Update: 2022-12-30 18:45 GMT

அண்ணாமலை நகர், 

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கால்பந்து போட்டி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறை விளையாட்டு அரங்கில் கடந்த நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 2-ம் நாள் போட்டி நடைபெற்றது. இதில் பெரியார் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் அணிகள் மோதியதில் பெரியார் பல்கலைக்கழகம் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதேபோல், பெங்களூர் பல்கலைக்கழகத்துடன் மோதிய சென்னை வேல்ஸ் இண்டாஸ் பல்கலைக்கழகம் 13-0 என்ற கோல் கணக்கிலும், தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்துடன் மோதிய பாரதியார் பல்கலைக்கழகம் 1-3 என்ற கோல் கணக்கிலும், விடியூ பெல்காம் பல்கலைக்கழகத்துடன் மோதிய புதுவை பல்கலைக்கழகம் 0-2 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற பெரியார் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், புதுவை பல்கலைக்கழகம், சென்னை வேல்ஸ் இன்டாஸ் பல்கலைக்கழக அணிகள் இன்று(சனிக்கிழமை) நடைபெறும் கால் இறுதி போட்டியில் விளையாட உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்