4 தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிகளில் 4 தங்கப்பதக்கம் வென்ற மாணவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

Update: 2023-01-16 13:41 GMT

குடியாத்தம் ஒன்றியம் சீவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. ஆசிய வலுத்தூக்கும் வீரர். இவரது மகன் ஜெயமாருதி (வயது 18). வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிகளில் சப்- ஜூனியர் 74 கிலோ உடல் எடை பிரிவில் கலந்து கொண்டு ஒட்டுமொத்தமாக 635.5 கிலோ எடையை தூக்கி 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

அவரை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பாராட்டி ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கினார். சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டினார்கள்.

இந்த நிலையில் 4 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த ஜெய மாருதியின் வீட்டிற்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேரடியாக சென்று அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்தும் பாராட்டினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சேகர், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்