வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு
வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு போனது.
புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 49). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியில் சென்று விட்டு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள் திருட்டு போகியிருந்தது. இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.