கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 ½ பவுன் சங்கிலி பறிப்பு

ஆண்டிப்பட்டி அருகே கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலியை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2022-06-26 17:07 GMT

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதி டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் ஓட்டல் வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ஓட்டலை பூட்டி விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரமேஷ் ஓட்டினார். மஞ்சுளா பின்னால் அமர்ந்திருந்தார்.

வைகை அணை சாலையில் ஜம்புலிபுத்தூர் பெருமாள் கோவில் அருகே சென்றபோது, அவர்களை மர்மநபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். இதையடுத்து ஒருகட்டத்தில் கண் இமைக்கும் நேரத்தில் மர்மநபர்கள் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து மஞ்சுளா வைகை அணை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்