கல்லூரி மாணவியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

வழி கேட்பது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் 4 பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-06-11 19:06 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள க.எறையூர் கிராமம் வடக்குதெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகள் ஜெயா (வயது 19). இவர் வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வீட்டிலிருந்து தனது வயல் காட்டுக்கு நெடுவாசல் பாதையில் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, 2 மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதில் பின்னால் அமர்ந்திருந்த நபர் கீழே இறங்கி வந்து ஜெயாவிடம் இந்த பாதை எந்த ஊருக்கு செல்கிறது என விசாரித்து அவரது கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி நெடுவாசல் கிராமம் வழியாக இருவரும் தப்பி சென்றனர்.

இதில் ஜெயாவின் பின் கழுத்து பகுதி மற்றும் இடது உள்ளங்கையில் சீராய்ப்பு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜெயாவின் தந்தை வெங்கடாசலம் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்