பள்ளத்தில் கார் பாய்ந்து 4 பேர் காயம்

வடமதுரை அருகே பள்ளத்தில் கார் பாய்ந்து 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-07-30 19:45 GMT

கேரள மாநிலம் கோட்டையம் அருகே உள்ள புதுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பிபின் (வயது 39). இவர் தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்றார். காரை பிபின் ஓட்டிச் சென்றார். நேற்று மாலை திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரையை அடுத்த வெள்ளபொம்மன்பட்டி பிரிவு அருகே கார் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் காரில் இருந்த பிபின் மற்றும் அவரது உறவினர்கள் நவீன் (36), சிமி (34), சாலிகுட்டி (72) ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்