கஞ்சா வைத்திருந்த 4 பேர் சிக்கினர்

தேவதானப்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-31 18:45 GMT

தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் கெங்குவார்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கெங்குவார்பட்டி வடக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு கையில் பையுடன் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசாா் சந்தேகத்தின்பேரில் பிடித்து பையை சோதனை செய்தனர். அதில் பையில் 1 கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (வயது 33), இன்பவள்ளி (47), காமக்காப்பட்டியை சேர்ந்த சந்துரு (27), தினேஷ் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்