விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்சுண்டு காலனி பகுதி அருகேயுள்ள சக்திவேல் (வயது 51) தோட்டத்தில் அரசு அனுமதியின்றி சிவந்திபுரத்தை சேர்ந்த சொந்தூர்பாண்டி (50), ஆறுமுகம்பட்டியை சேர்ந்த கணேசன் (44), முத்துக்குமரன் (45) ஆகியோர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், செந்தூர்பாண்டி, கணேசன், முத்துக்குமரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.