புகையிலைப்பொருட்கள் விற்ற 4 பேர் கைது

திண்டுக்கல், வடமதுரை ஆகிய பகுதிகளில் புகையிலைப்பொருட்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-07 19:45 GMT

வடமதுரை பகுதிகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தும்மலக்குண்டு கன்னிமார் கோவில் அருகே கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பா.புதுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி (வயது 51), மற்றொரு அழகர்சாமி (55), குருந்தம்பட்டியைச் சேர்ந்த முருகன் (43) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 900 கிராம் புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


இதேபோல் திண்டுக்கல் அருகே சீலப்பாடி பகுதியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு கருதனம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (36) என்பவரது டீக்கடையில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு புகையிலைப்பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 3 கிலோ புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.





Tags:    

மேலும் செய்திகள்