அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

சிவகாசி அருேக அனுமதியின்றி மதுவிற்ற 4 பேரை போலீசார் கைது செய்து 665 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-05-03 19:59 GMT

சிவகாசி, 

சிவகாசி அருேக அனுமதியின்றி மதுவிற்ற 4 பேரை போலீசார் கைது செய்து 665 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

4 பேர் கைது

சிவகாசி அருகே கொத்தனேரியில் உள்ள அரசு டாஸ்மாக் கடை அருகே ராமர் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அனுமதியின்றி மதுவிற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சாதாரண உடையில் சென்றார்.

அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்ற அதே பகுதியை சேர்ந்த பிரபு (வயது 29), தவசி செல்வம் (22), பன்னீர்செல்வம் (36), முருகன் (55) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

665 மதுபாட்டில்கள் பறிமுதல்

இதையடுத்து பதுக்கி வைத்திருந்த 665 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த எம்.புதுப்பட்டி போலீசார் அனுமதியின்றி மதுவிற்ற 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அனுமதியின்றி மது விற்பனைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் யாராவது உடந்தையாக இருந்தனரா? என எம்.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்