ஆலங்குடியில் மதுவிற்ற 4 பேர் கைது
ஆலங்குடியில் மதுவிற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குடியில் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி அருகே உள்ள சொக்கன் தெருவை சேர்ந்த இளையராஜா (வயது 43) என்பவர் தனது வீட்டின் அருகே மது விற்றுக்கொண்டிருந்தார். இதேபோல் பட்டுக்கோட்டை காட்டாத்தி ஊராட்சி ஒஞ்சிவிடுதியை சேர்ந்த சின்னப்பா (35) புதுவிடுதி டாஸ்மாக்கடை அருகே மது விற்றுக்கொண்டிருந்தார். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் அறந்தாங்கி வீரராகபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (55), ஆலங்குடியை அடுத்த அனவயல் ஜீவா நகரை சேர்ந்த சேகர் (54) ஆகியோர் மதுபானம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் 4 பேரிடம் இருந்து மொத்தம் 58 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.