தூசி
வெம்பாக்கம் தாலுகா தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தூசி அருகே மகாஜனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனி (வயது 55), சித்தாலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த உளியான் என்ற கோவிந்தன் (41), ஹரிஹரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் மது விற்றபோது அவர்களை பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.