கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மது விற்றதாக நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டியை சேர்ந்த பெரியசாமி (வயது 55), குளித்தலையை சேர்ந்த முத்து (45), செந்தில்குமார் (43), ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்த பெரியசாமி (58) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 16 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.