மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-20 18:48 GMT

நச்சலூர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்ேபரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நங்கம் வாய்க்கல் கரை பகுதியில் பொய்யாமணியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 39), சவாரிமேடு பகுதியை சேர்ந்த கோபிநாத் (29), பாறைப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த வைரமணி (43), திருச்சாப்பூர் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் (40) ஆகிய 4 பேரும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்