தொழிலாளியிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது
தொழிலாளியிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது
கோவை
கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் முக்ரம் (வயது 38), தொழிலாளி. இவர் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக ரெயில் நிலையம் பின்புறம் உள்ள கூட்செட் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் திடீரென்று முக்ரமை தடுத்து நிறுத்தியதுடன், அவரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.730-ஐ பறித்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உக்கடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வரும் வேலூரை சேர்ந்த சதீஷ் (19), ஊட்டியை சேர்ந்த சந்தோஷ் (38), அரியலூரை சேர்ந்த வேல்முருகன் (30), தஞ்சாவூரை சேர்ந்த ராமதுரை (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.