வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 4 பேர் கைது

ராமநாதபுரத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-17 18:45 GMT

ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது35). கூலித்தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் வேலை முடிந்து புதிய பஸ்நிலையம் அம்மா உணவகம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த 4 பேர் நாகராஜனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துள்ளனர். இது குறித்து நாகராஜன் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ஓம்சக்திநகர் சாயக்கார ஊருணி தெருவை சேர்ந்த முருகேசன் மகன் வெடிராஜா (21), சூரங்கோட்டை சிவக்குமார் மகன் பாட்டில் மணிகண்டன் (20), காட்டூரணி முருகன் மகன் விகாஷ் (21), பசும்பொன்நகர் சிவக்குமார் மகன் சிவனேஷ் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்