லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம்

லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-11-18 11:22 GMT

வாணியம்பாடி

லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

வாணியம்பாடி- சலாமாபாத் பகுதியை சேர்ந்தவர். ஏஜாஸ் இவர் தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பின்னர் இருந்து ெரயில் மூலம் ஜோலார்பேட்டைக்கு வந்தார்.

பின்னர் அங்கிருந்து குடும்பத்தினருடன் ஆட்டோவில் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார். ஒரே ஆட்டோவில் 12 பேர் பயணம் செய்துள்ளனர். அந்த ஆட்டோவை பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ஒட்டி சென்றுள்ளார். வாணியம்பாடியை அடுத்த ஜனதாபுரம் பகுதியில் சென்றபோது சாலையோரமாக நின்றுக் கொண்டிருந்த 0கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் ராஜா (வயது 33), ஆட்டோவில் பயணம் செய்த ஏஜாஸ் (25), கலீம் (45), ஜரீனா (53) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்