மலை தேனீக்கள் கொட்டி 4 பேர் படுகாயம்

கே.வி.குப்பம் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-26 18:47 GMT

கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலக மன்ற வளாகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் லோ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, பெ.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி மேலாளர் பா.வேலு வரவேற்றார்.

கூட்டத்தில், உறுப்பினர்களுக்கு நிதி ஆதாரத்தை உயர்த்தி ரூ.5 லட்சம் வரை வழங்க வேண்டும். பல்வேறு இடங்களில் அங்கன்வாடி மையங்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து உள்ளன. அதை சீரமைக்க வேண்டும் அல்லது புதிதாக கட்டித்தர வேண்டும்.

வேப்பங்கநேரி பகுதிக்கு பஸ் நிழற்கூடம் அமைக்க வேண்டும். கோடை காலத்தை கருத்தில் கொண்டு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.

அன்னங்குடி, திருமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிமெண்டு சாலை வசதி செய்துதர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினர்கள் பேசினார்கள்.

தலைவர் பேசுகையில், நிதி ஆதாரம் பெறுவதற்கான திட்ட மதிப்பீட்டை தயார் செய்து கொடுங்கள். தகுதி உடையவர்களுக்கு வழங்க பரிந்துரை செய்யப்படும். போதிய நிதி ஒதுக்கீடு கிடைத்த பிறகு உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என்றார்.

கூட்டத்தில் மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்