மது விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது

ஆம்பூர் அருகே மது விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-16 18:02 GMT

ஆம்பூர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சோதனை நடத்தினர். இதில் பெரியங்குப்பம் பகுதியை சேர்ந்த ராதிகா (வயது 30), ராஜேஸ்வரி (55), சந்திரன் (42) மற்றும் விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த பிச்சைமணி (56) ஆகியோர் வீட்டில் அரசு மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 60 அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்