சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-18 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்து நாகை மாவட்டத்தில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் பேரில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கீழ்வேளூர் அருகே சிக்கல், ஆழியூர், தேவூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிக்கல் அய்யனார் கோவில் தெருவில் சாராயம் விற்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஜெயவீரபாண்டியன் மனைவி முனீஸ்வரி (வயது 32) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரியை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல ஆழியூர் பிரிவு சாலையில் சாராயம் விற்ற திருப்பூண்டி காரை நகரைச் சேர்ந்த முருகையன் மகன் தமிழரசன் (28), சிக்கல் ஊராட்சி கோட்டேரி அய்யனார் கோவில் தெருவில் சாராயம் விற்ற பழையனூர் மேல் பாதியை சேர்ந்த கோபி மகன் சஞ்சு (19), தேவூர் அரசு மாணவர் விடுதி அருகே சாராயம் விற்ற தேவூர் குயவர் தெருவை சேர்ந்த தேவகுரு நாதன் மகன் செந்தில்குமார் (36) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்