கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேரை கைது

கரூரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

Update: 2022-09-04 17:46 GMT

23 கிலோ கஞ்சா

கரூர் பெரிய ஆண்டாங்கோவில் அருகே கஞ்சா வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில், கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு டிராக்டரை போலீசார் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர். அப்போது அதில் விற்பனைக்காக 23 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து கஞ்சா விற்றதாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த சென்ராயன் (வயது 42), மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஜீவானந்தம் (21), போடிநாயக்கனூர் அருகே உள்ள குப்பு நாயக்கன்பட்டியை சேர்ந்த கவாஸ்கர் (20) மற்றும் கஸ்தூரி (43) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய பிரதீப் குமார் (23) என்பவரை தேடி வருகின்றனர்.தொடர்ந்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 23 கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்திய டிராக்டர், 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து 44 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்