கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-18 23:35 GMT

கே.கே.நகர்:

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற ராம்ஜி நகர், காந்தி நகர் பகுதியை சேர்ந்த லாவண்யா (வயது 35), ராம்ஜி நகர் சன்னாசி புதூர் காட்டூர் பகுதியை சேர்ந்த நமச்சிவாயம் (65), எடமலைப்பட்டி புதூர் புதுத்தெரு பகுதியை சேர்ந்த ரஜினி(43) மற்றும் எடமலைப்பட்டி புதூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரஞ்சித்குமார்(23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்