லாரிகளில் பேட்டரி திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
வேதாரண்யம் அருகே லாரிகளில் பேட்டரி திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே லாரிகளில் பேட்டரி திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேட்டரிகள் திருட்டு
வேதாரண்யம் அருகே கோவில்பத்தில் ஆசியாவில் 2-வது மிகப்பெரிய நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது.இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் நெல் ஏற்றி இறக்கும் பணி நடைபெறும். நெல் ஏற்ற வரும் லாரிகள் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று நெல் கொள்முதல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகளில் இருந்து 6 பேட்டரிகள் மற்றும் தார்பாய்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
4 பேர் கைது
இதுகுறித்த புகாரின் போரில் வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரிகளில் பேட்டரி மற்றும் தார்பாய்களை திருடி சென்ற தாதன்திருவாசல் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் (வயது22) மற்றும் 3 சிறுவர்கள் என 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.