சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது

சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-23 14:19 GMT

சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதியில் சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரில் உண்ணாமலை (வயது 56), மல்லவாடி கிராமத்தை சேர்ந்த மனோகரி (65), அதே பகுதியைச் சேர்ந்த சிவா (49) ஆகியோர் அவர்களது வீடுகளின் அருகிலும், கீழ்பென்னாத்தூர் தாலுகா கல்லாய் சொரத்தூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (25) துரிஞ்சாபுரம் ஏரிக்கரை அருகிலும் சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 411 லிட்டர் சாராயம் மற்றும் 35 லிட்டர் எரி சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்