செல்போன் பறித்த ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கைது

காட்பாடியில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு காரில் தப்பிய கும்பலை போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 9 செல்போன்கள் பறநிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-04-04 18:31 GMT

காட்பாடி

காட்பாடியில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு காரில் தப்பிய கும்பலை போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 9 செல்போன்கள் பறநிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;

செல்போன் பறிப்பு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 54). இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு காட்பாடி ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் அவர் சட்டை பையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு சீனிவாசன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன், சப் -இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் குடியாத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்த காரை துரத்தி மடக்கி பிடித்தனர். காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

அதில் அவர்கள் ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி ஆக்சிவேடு கிராமத்தைச் சேர்ந்த நக்கா வெங்கடேஷ் (வயது 22), மேகல் சாய் (25), மேற்கு கோதாவரி சின்சலபேட்டை கிராமத்தைச் சேர்ந்த பன்னசு பாலாஜி (20), செரிகும்மள்ளி கிராமத்தைச் சேர்ந்த கம்பம் டேவிட் (35) ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் பல இடங்களில் செல்போன்கள் திருடியது தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து 9 செல்போன்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்