வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலியானார்கள்.

Update: 2023-09-11 19:55 GMT

வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலியானார்கள்.

கார் மோதியது

மணப்பாறையை அடுத்த கரட்டுபட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 59). சம்பவத்தன்று இவர் கரட்டுபட்டி அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் பலி

துவாக்குடி அருகே உள்ள அசூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசனின் மகன் ஜெகன்குமார் (27). இவர் நேற்று தனது மொபட்டில் பழங்கனாங்குடி- பூலாங்குடி இடையே சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டளை வாய்க்கால் கட்டையில் மொபட் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெகன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில் தண்டவாளம் அருகே...

*லால்குடி ரெயில்வே கேட்டில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் தண்டவாளம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடுமாறி விழுந்து சாவு

திருச்சி ஸ்ரீரங்கம் குடிசை மாற்று வாரியத்தை சேர்ந்தவர் முத்துசாமி (70). இவர் வயலூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு கோவிலின் எதிரே உள்ளமாடியில் அன்னதான மண்டபத்தில் உணவு அருந்திவிட்டு கீழே இறங்கும் போது மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதை கண்ட அப்பகுதியினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன்இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்