வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது

நாகையில் வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-10 18:45 GMT


நாகை கூக்ஸ் ரோட்டை சேர்ந்தவர் சிவன்பாண்டி (வயது36). இவர் மீது கொலை, சாராய கடத்தல், அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 8-ந்தேதி அபிராமி அம்மன் திடல் அருகே நண்பர்களுடன் சென்ற போது, பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், முன்விரோதம் காரணமாக சிவன்பாண்டியை கொலை செய்த வெளிப்பாளையம் பெருமாள் வடம் போக்கி தெருவை சேர்ந்த தீபன்ராஜ் (31), வெளிப்பாளையம் தர்மகோவில் தெருவை சேர்ந்த கிருபாகரன் (27), தெற்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த கருவேப்பிலை என்கிற சுபாஷ் (21), நாகை செம்மரக்கடைத் தெருவை சேர்ந்த சேத்தப்பா என்கிற சாகுல்ஹமீது (44) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்