குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது
குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்
மதுரை
மதுரை பீ.பி.குளம் இந்திராநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 24), பனங்காடி வாகைகுளத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (21), செல்லூர் ஜீவாரோடு பகுதியை சேர்ந்தவர் பூபதி ராகவேந்திரன் (20), தத்தனேரி கண்மாய் கரையை சேர்ந்தவர் சுபாஷ் (24). இவர்கள் 4 பேர் மீதும் நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, இவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.