சினிமா தியேட்டரில் இரும்பு நாற்காலிகளை திருடிய 4 பேர் கைது
சினிமா தியேட்டரில் இரும்பு நாற்காலிகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
துறையூர் சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் துறையூரில் லட்சுமி சினிமாஸ் என்று திரையரங்கம் நடத்தி வருகிறார். இந்த தியேட்டர் பராமரிப்பு பணிக்காக கடந்த 5-ந்தேதி மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்று பிரகாஷ் திேயட்டருக்கு சென்று பார்த்தார். அப்போது, அங்கு இருந்த 25 இரும்பு நாற்காலிகள் திருட்டுபோய் இருந்தது. இது குறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, தியேட்டரில் தற்காலிகமாக பணிபுரியும் துறையூரை சேர்ந்த அஜித் (வயது 20) உள்பட 4 பேர் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் திருடிய நாற்காலிகளை இரும்பு கடையில் விற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.