600 கிலோ இரும்பு கம்பிகள் திருடிய 4 பேர் கைது

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் கட்டுமான இரும்பு கம்பிகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-03 11:10 GMT

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் கட்டுமான இரும்பு கம்பிகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இரும்பு கம்பிகள் திருட்டு

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பிரகாஷ் நகர் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் கடந்த மாதம் 600 கிலோ கட்டுமான இரும்பு கம்பிகள் காணாமல் போனது. இதுகுறித்து கட்டுமான நிறுவனத்தின் அரசு கட்டுமான ஒப்பந்தகாரரான திசையன்விளை முதுமொத்தான்மொழியை சேர்ந்த முருகானந்தம் மகன் வினோத்குமார் (வயது 36) என்பவர் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் மகாராஜன் (31), பிச்சையா மகன் அஜித்குமார் (26), போஸ் மகன் இருளாண்டி (36) மற்றும் இப்ராஹிம் மகன் மூசா முகமது காசிம் (25) ஆகியோர் கட்டுமான இரும்பு கம்பிகளை திருடியது தெரியவந்தது.

4 பேர் கைது

இதனையடுத்து மகாராஜன், அஜித்குமார், இருளாண்டி மற்றும் மூசா முகமது காசிம் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த திருடப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 600 கிலோ இரும்பு கம்பிகள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அஜித்குமார் மீது முத்தையாபுரம், ஆத்தூர், புதியம்புத்தூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்