லாட்டரி, மது விற்ற 4 பேர் கைது

லாட்டரி, மது விற்ற 4 பேர் கைது

Update: 2023-08-07 20:45 GMT

ஆனைமலை

ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன்புதூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், லாட்டரி சீட்டுகளை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த வஞ்சியப்பன்(வயது 70) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோன்று அதே பகுதியில் மது விற்றதாக செந்தில்குமார்(42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் வைத்திருந்த 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் பஸ் நிறுத்த பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அழகப்பா காலனியை சேர்ந்த சைக்கிள் கடைக்காரர் மனோகரன்(45) என்பவரை மகாலிங்கபுரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பூவலப்பருத்தி வாய்க்கால்மேடு பகுதியில் மது விற்ற புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியை சேர்ந்த கூலித்தொழிலாளி புதுமைதாஸ்(34) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்