சுதந்திர தினத்தில் மது விற்ற 4 பேர் கைது

சுதந்திர தினத்தில் மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-15 18:48 GMT

அன்னவாசல்:

சுதந்திர தினத்தன்று மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதனையும் மீறி பல இடங்களில் மது பாட்டில்கள் விற்றது முன்கூட்டியே தெரிய வரவே புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்னவாசல் டாஸ்மாக் கடை அருகே மதுவிற்ற ஆலங்குடி கல்லாலங்குடியை சேர்ந்த முத்துக்குமார் மகன் மணிகண்டன் (வயது 20) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 467 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல் இலுப்பூர் அரசுமருத்துவமனை அருகே மது பாட்டில்களை விற்பனைக்கு வாங்கி வந்த மாராயப்பட்டியை சேர்ந்த இளங்கோவன் (42) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 39 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இலுப்பூர் கலர்பட்டியில் விற்பனைக்காக 33 மது பாட்டில்களை வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த கலர்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் ராமசந்திரன் (33) என்பவரையும், இலுப்பூரில் மது விற்பனைக்காக 20 மதுபாட்டில்களை கொண்டு சென்ற குரும்பட்டி மாறன் (70) என்பவரை கைது செய்த போலீசார் அவர்களை இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்