தேங்காய் வியாபாரியை தாக்கிய 4 பேர் கைது
நெல்லையில் தேங்காய் வியாபாரியை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் இசக்கிகுமார். இவர் அந்த பகுதியில் தேங்காய் கடை வைத்து உள்ளார். இவருக்கும், அருகே தேங்காய் கடை நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 43) என்பவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்ததாம். இந்த நிலையில் சீனிவாசன் தூண்டுதலின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் சேர்ந்து இசக்கிகுமாரிடம் தகராறு செய்து அவரை தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் சீனிவாசன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். சிறுவர்கள் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.