துவரங்குறிச்சியில் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய 4 பேர் கைது

துவரங்குறிச்சியில் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-20 19:36 GMT

துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. விழாவிற்கு பழையபாளையம் கிராமத்தில் இருந்து பூத்தட்டுகளுடன் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களைச்சாற்றி வழிபட்டுச் சென்றனர். இவர்கள் மீண்டும் ஊருக்குச் சென்றபோது துவரங்குறிச்சியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழையபாளையத்தைச் சேர்ந்த பெண்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட பழையபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணனை தாக்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஊராட்சி தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி துவரங்குறிச்சியில் நள்ளிரவில் சாலைமறியலில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தவ்பிக் என்பவர் அளித்த புகாரின் பேரில் 2 பேர் பேர் கைது செய்யப்பட்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்