ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
வடவள்ளி
கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4 பேர் தற்கொலை
கோவை வடவள்ளி வேம்பு அவன்யூ பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி லக் ஷயா. இவர்களின் மகள் யக்சிதா. அதே வீட்டில் ராஜேஷின் தாயார் பிரேமா என்பவரும் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ராஜேஷின் வீட்டில் இருந்து நேற்று இரவு துர்நாற்றம் வீசியது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், ராஜேஷின் தாயார் பிரேமா, மனைவி லக் ஷயா, மகள் யக்சிதா ஆகியோர் விஷம் குடித்த நிலையில் தற்கொலை செய்து பிணமாக கிடந்தனர்.
கடன் தொல்லையா?
மேலும் அவர்கள் இறந்து 2 நாட்கள் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.பிணமாக கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.