இலவச வேஷ்டி சேலை பெறுவதற்காக டோக்கன் வாங்க குவிந்த பெண்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு - டிடிவி தினகரன் இரங்கல்

இலவச வேஷ்டி சேலை பெறுவதற்காக டோக்கன் வாங்க குவிந்த பெண்களில் 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Update: 2023-02-04 13:32 GMT

சென்னை,

தைப்பூசத்தை முன்னிட்டு வாணியம்பாடியில் ஜின்னா பாலம் அருகே தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேட்டி சேலைகள் வழங்குவதற்கு டோக்கன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு ஆயிரகணக்கான பெண்கள் குவிந்தனர். இதில் கூட்ட நெரிசலில் பல மயங்கி விழுந்தனர். அப்போது கூட்ட நெரிசலில்சிக்கி 4 பெண்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் இலவச வேஷ்டி சேலை பெறுவதற்காக டோக்கன் வாங்க குவிந்த பெண்களில் 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தனியார் ஒருவர் நடத்திய நிகழ்வில் இலவச வேஷ்டி சேலை பெறுவதற்காக டோக்கன் வாங்க குவிந்த பெண்களில் 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது.

முன்அனுமதி பெற்று நிகழ்வு நடந்தபோதிலும் காவல்துறையினர் அதிக அளவு கூட்டம் குவிந்ததை கட்டுப்படுத்த தவறியது கண்டிக்கத்தக்கது.

உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்