ரெயிலில் 4½ கிலோ கஞ்சா பறிமுதல்
ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 4½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்க ரெயில்வே தனிப்படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று காலை தன்பாத்-ஆலப்புழா செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 2 பைகளில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அதில் இருந்த 4½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.